புதன், 4 ஜனவரி, 2012

தயாரிப்பாளரான ஆர்யா, ஜீவா


முதன் முதலாக புதிய படமொன்றை தயாரிப்பதில் நடிகர் ஆர்யாவும், ஜீவாவும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனான நடிகர் ஜீவா இதுவரை படத்தயாரிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார்.
ஆனால் தற்போது முதன் முறையாக நடிகர் ஆர்யாவுடன் இணைந்து சினிமா தயாரிப்பில் இறங்குகியுள்ளார் ஜீவா.
ஆர்யாவும், ஜீவாவும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகர்களாக இருவருமே நடிக்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் நடித்ததிலிருந்து இருவரும் நெறுங்கிய நண்பர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக