சனி, 7 ஜனவரி, 2012

சிம்பு வெளிப்படையானவர்: தீக்‌ஷா


நான் பார்த்த வரைக்கும் அனைத்து விஷயத்திலும் நடிகர் சிம்பு மிகவும் வெளிப்படையானவர் என்று தீக்‌ஷா கூறியுள்ளார்.
ராஜபாட்டை படத்தில் நடிகர் விக்ரம் ஜோடியாக நடித்தவர் நடிகை தீக்‌ஷா.
சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் திரைப்படத்தில் தீக்‌ஷா நடிக்கவுள்ளார், அவருடன் ஹன்சிகா மோத்வானியும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதுபற்றி தீக்‌ஷா கூறுகையில், வேட்டை மன்னன் திரைப்படத்தில் என்னுடன் ஹன்சிகா மோத்வானியும் நடிக்கவுள்ளார்கள். ஆனால் இப்படத்தைப்பற்றி இதுவரைக்கும் நடிகர் சிம்பு என்னிடம் பேசியதில்லை.
நான் பார்த்த வரைக்கும் அனைத்து விஷயத்திங்களிலும் சிம்பு மிகவும் வெளிப்படையானவர். நீ தான் இப்படத்தின் கதாநாயகி என்று கூறிதான் இப்பொறுப்பை ஒப்படைத்தார் என்று கூறினார்.
மேலும் திருமணம் பற்றிய கேள்விக்கு அவர் கூறுகையில், எனக்கு இப்பொழுதுதான் 20 வயது ஆகியுள்ளது, ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் திருமணத்தை பற்றி பேசலாம் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக