திங்கள், 30 ஜனவரி, 2012

கனடா செல்லும் இரண்டாம் உலகப் படக்குழுவினர்


இரண்டாம் உலகம் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக கனடா செல்கின்றனர் செல்வராகவன் படக்குழுவினர்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் இரண்டாம் உலகம்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதொராபாத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இயக்குனர் செல்வராகவனுக்கு குழந்தை பிறந்தது.
இதனையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இப்படப்பிடிப்பை நடத்துவதற்காக படக்குழுவினர் கனடா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
இதனையடுத்து விரைவில் கனடா செல்லும் திகதி அறிவிக்கப்படுமென படக்குழுவினர் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக