திங்கள், 9 ஜனவரி, 2012

நாகரீக இளைஞனாக வலம் வருகிற விமல்


தமிழ் திரையுலகில் களவாணி நாயகன் விமல் இஷ்டம் திரைப்படத்தில் மென்பொருள் பொறியாளராக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகில் களவாணி நாயகன் விமல் இஷ்டம் திரைப்படத்திற்காக நாகரீக இளைஞன் போல் தன்னை மாற்றியுள்ளார்.
இஷ்டம் படத்தில் மென்பொருள் பொறியாளர் வேடம் என்பதால் விமல் தன் மீசையை நீக்கி தன்னுடைய தோற்றத்தை மாற்றியுள்ளார்.
நாயகன் விமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் நடிக்கிறார். இஷ்டம் திரைப்படத்தின் மற்றொரு ஜோடியாக அனூப் மற்றும் பார்வதி நிர்பான் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் நகைச்சுவை நடிகர்கள் சார்லி, சந்தானம், செம்புலி ஜெகன், கராத்தே ராஜா, யுவராணி, உமா பத்மநாபன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வேகமாக வளர்ந்து வரும் இஷ்டம் திரைப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரேம் நிசார் இயக்குகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக