புதன், 25 ஜனவரி, 2012

சித்தார்த்தின் சொதப்பல் அனுபவங்கள்


காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படி அமையும் என்று நாயகன் சித்தார்த் கூறியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்து தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட் படத்திலும் சித்தார்த் நடித்தார்.
தற்போது காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை சசிகாந்த் மற்றும் நிரவ் ஷா இருவருடனும் இணைந்து தயாரித்துள்ளார்.
இயக்குனர் பாலாஜி மோகனின் பத்து நிமிட குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது. காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடிப்பதோடு தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளேன்.
இந்த அழகான காதல் படத்தில் அமலா பால் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் தலைப்பை ரசிக்கிறவர்கள் என்னிடம் நிஜ வாழ்க்கையில் சொதப்பிய அனுபவத்தை கேட்கிறார்கள். என் பள்ளிப்பருவ நாட்களில் இருந்து நிறைய சொதப்பல் அனுபவங்களை சொல்லலாம்.
இந்தப்படத்தை அனைத்து வயதினரும் ரசிக்கும்படியாக எடுத்து வருகிறோம். இந்திய மொழிகளில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆங்கிலத்திலும் நான் நடித்துள்ளேன்.
இந்த ஆண்டிலிருந்து நிறைய தமிழ் படங்களில் நடிப்பதாக முடிவெடுத்துள்ளேன் என்று 'காதலில் சொதப்புவது எப்படி' பட நாயகன் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக