![]() |
தமிழ் சினிமாவில் பசங்க, வம்சம் படங்களுக்கு பிறகு மூன்றாவதாக கடற்கரையை கதைக் களமாக வைத்து மெரீனா படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.![]() மேலும் இப்படத்தில் நாயகனாக விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளரான சிவகார்த்திகேயன் நாயகனாகவும், களவாணி பட புகழ் ஓவியா நாயகியாகவும் இணைந்து நடித்துள்ளார்கள். பசங்க படத்தில் நடித்த சிறுவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இது மெரீனா சம்பந்தப்பட்ட கதை என்பதால் இப்படத்தின் இசை குறுந்தகடை நாளை காலை(9.1.2012) பொழுதில் காந்தி சிலை அருகே படத் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்கள், திரையுல பிரபலங்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு முன்பாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பொருட்டு மெரினாவை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது என்று மெரீனா பட இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். |
ஞாயிறு, 8 ஜனவரி, 2012
கடற்கரையை சுத்தப்படுத்தும் மெரீனா பட இயக்குனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக