![]() |
தல அஜீத் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் பில்லா 2 படத்திற்கான LOGO மட்டுமே முதலில் வெளியானது.![]() அவ்விளம்பரத்திற்கு அஜீத் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக EVERY MAN HAS A PAST.. EVERY DON HAS A HISTORY என்ற வார்த்தைகள் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. பில்லா படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா தான் பில்லா 2 படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தில் வரும் முதல் பாடல் மட்டும் இன்னும் தயாராக வில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ஆனால் மற்ற பாடல்கள் அனைத்தையும் யுவன் ஷங்கர் ராஜா முடித்து கொடுத்து விட்டார். பில்லா படத்தில் இடம் பெற்ற TITLE TRACK போலவே பில்லா 2 படத்தில் இடம் பெற இருக்கும் பாடலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று யுவன் அதிகம் யோசித்து வருகிறார். மேலும் இப்பாடலுக்கு யார் நடனம் அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் பில்லா-2 மங்காத்தா படத்தினை விட சுமார் 30% அதிகமாக விற்று இருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு அஜீத்தின் பில்லா 2 விற்பனையாகி இருப்பது படக்குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. |
செவ்வாய், 17 ஜனவரி, 2012
பில்லா-2 திரைப்படத்திற்கான விற்பனை அமோகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக