ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்: ஸ்ரேயா


பண கஷ்டம் இல்லாததால் நல்ல திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கப் போவதாக நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்த நடிகை ஸ்ரேயா சமீப காலமாக எந்த திரைப்படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
தமிழில் கடைசியாக ஸ்ரேயா ரௌத்திரம் படத்தில் நடித்துள்ளார்.
வாய்ப்பில்லாமல் இருப்பது பற்றி ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நான் பன்னிரெண்டு வருடமாக சினிமாவில் நடித்து வருகிறேன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன் என்ற பெயரைப் பெற்றுள்ளேன்.
நல்ல நடிகைகளுக்கு வர்த்தக நிலை என்ற வரையறையே கிடையாது. எனக்கு படவாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்படுவது உண்மை இல்லை.
சினிமாவுக்கு வந்த பொழுதே எல்லா திரைப்படங்களையும் ஒப்புக் கொண்டேன். சில திரைப்படங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் வேண்டப்பட்டவராக இருந்ததால் நடித்தேன்.
தற்போது அப்படியெல்லாம் நடிக்க வேண்டிய அவசியமும், பணக்கஷ்டமும் இல்லை. எனவே இனிமேல் நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது, விளம்பரங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சேவை அமைப்புகள் என எனக்கு நிற்க நேரமில்லாத அளவுக்கு நிறைய வேலை உள்ளது. நான் ரொம்ப பிஸியாக இருக்கிறேன் என்று பரபரப்பாக பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக