திங்கள், 9 ஜனவரி, 2012

ஷாருக்கான் போன்ற நபரையே திருமணம் செய்வேன்: தீக்ஷா சேத்


பாலிவுட் நாயகன் ஷாருக்கான் போன்ற நபரையே திருமணம் செய்ய உள்ளதாக ராஜபாட்டை நாயகி தீக்ஷா சேத் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் சீயான் விக்ரமுடன் ராஜபாட்டை திரைப்படத்தில் நாயகியாக தீக்ஷா சேத் நடித்துள்ளார்.
தமிழில் முதல் திரைப்படமே முன்னணி நாயகனுடன் நடித்துள்ள மகிழ்ச்சியில் தீக்ஷா சேத் இருக்கிறார்.
தன்னுடைய அடுத்த படமாக வேட்டை மன்னன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைய உள்ளார். மேலும் தெலுங்கில் ரிபெல் மற்றும் நீப்பு ஆகிய திரைப்படங்களில் பரபரப்பாக நாயகி தீக்ஷா சேத் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திருமணத்தைப் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, திருமணம் செய்தால் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் போன்ற மனிதரையே திருமணம் செய்வேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக