![]() |
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் கர்மா திரைப்படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக இயக்குனர் அரவிந்த் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.![]() பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் அரவிந்த் ராமலிங்கம் கூறியதாவது, கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் என்னும் பட நிறுவனம் கர்மா என்ற படத்தை தயாரிக்கிறது. கர்மா படத்தை நான் எழுதி இயக்குகிறேன். இப்படத்தின் கதையை தற்போதுள்ள நடிகர்களிடம் சொல்லி நடிக்க கேட்டேன். அவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் இப்படத்தில் நடிப்பதற்கு தைரியமான புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். இப்படம் மனோதத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள திகிலான படமாகும். நாயகனி்டம் வில்லத்தனமான தன்மைகள் அதிகமாக இருக்கும் என்பதால் பிரபல நடிகர்கள் யாரும் நடிக்க முன்வரவில்லை. கர்மா திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதிய முகங்களாக இருந்தாலும் அனைவரும் திறமைசாலிகள். புதுமுக நடிகர்களுக்கான தெரிவை வித்தியாசமாக நடத்த இருக்கிறோம். இப்படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர், நடிகைகள் தங்களின் 3 விதமான புகைப்படங்களையும்,காணொளிகளையும் karmamoviecasting@gmail.com என்ற முகவரிக்கு வருகிற சனவரி 31ம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து தெரிவு செய்யப்படுபவர்கள் எங்களது பேஸ்புக் தளத்தில் இடம்பெறுவார்கள். அவர்களில் யார் ரசிகர்களிடம் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அதன் அடிப்படையில் இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியை தெரிவு செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விபரங்களை http://www.karma-movie.com/ என்ற வலைப்பக்க முகவரியில் இதற்கான வழிமுறைகளை கொடுத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். |
வியாழன், 19 ஜனவரி, 2012
கர்மா திரைப்படத்தில் நடிக்க புது நடிகர்கள் தேவை: இயக்குனர் அரவிந்த் அறிவிப்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக