வெள்ளி, 13 ஜனவரி, 2012

வேட்டை திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள்


லிங்குசாமி இயக்கத்தில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் வேட்டை திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று(11.1.2012) வெளியிடப்பட்டது.
வேட்டை திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையிலுள்ள பிரசாத் லேப்ஸில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
இயக்குனர் லிங்குசாமி, நடிகர் ஆர்யா மற்றும் இக்திரைப்படத்தி்ன் குழுவினர் அனைவரும் இந்த காட்சியை கண்டுகளித்தனர்.
இப்படத்தின் தயாரிப்பு மிகவும் பெருமைப்பட வைப்பதாக இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.
வேட்டை திரைப்படத்தின் முதன்மை நிகழ்ச்சி இன்று(12.1.2012) நடைபெறவுள்ளது. இதில் நடிகர்கள் அவர்களின் குடும்பத்துடன் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
மேலும் இதனைப்பற்றி இப்படத்தின் கதாநாயகி அமலா பால் கூறுகையில், இப்படத்தின் முதன்மை காட்சியில், என் குடும்பம் மற்றும் என் நண்பர்களுடன் கலந்து கொள்ள மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக