வியாழன், 19 ஜனவரி, 2012

சிறப்பு வழிபாடு செய்த தனுஷ்


கொலவெறிடி பாடல் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் நடிகர் தனுஷ்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 3 திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கொலவெறிடி பாடலை இப்படத்தின் கதாநாயகனான தனுஷே எழுதி பாடியுள்ளார்.
பிரதமரே தனுஷை அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு இப்பாடல் உலகெங்கும் பரவியுள்ளது.
இப்பாடலின் வெற்றியையடுத்து உத்தரபிரதேச மாநிலம், பனாரஸில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து தனுஷ் வழிபட்டுள்ளார்.
அந்த கோயிலைப் பற்றி தனுஷ் கூறுகையில், காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள நகரை மிகவும் விரும்புகிறேன்.
அமைதி, அழகு போன்றவற்றின் சொர்க்கமாக காசி விளங்குகிறது. எனவே மீண்டும் அங்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக