வெள்ளி, 20 ஜனவரி, 2012

மீண்டும் இணையும் ஸ்ரீகாந்த், பிருத்விராஜ்


நடிகர் ஸ்ரீகாந்தும் அவரது நண்பன் பிரித்விராஜும் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க கேரளா சென்றுள்ளனர்.
கேரள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைப்பது போன்று, கேரள நடிகர்களுக்கும் தமிழ் சினிமாவில் சமீப காலமாக நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
ஸ்ரீகாந்தும் தன் நண்பன் நடிகர் பிரித்விராஜின் வேண்டுகோளை ஏற்று ஒரு மலையாளப் படத்தில் நடிக்க கேரளா சென்றுள்ளார்.
கனாக்கண்டேன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரித்விராஜ் தற்போது ஹீரோ என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியில் ஸ்ரீகாந்த நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை கேரளாவிற்கு கிளம்பி வர சொல்லியிருக்கிறார்.
என்ன கதாபாத்திரம் என்று கூட கேட்காமல் உடனே படப்பிடிப்பு நடக்கும் கொச்சினுக்கு ஸ்ரீகாந்த சென்றுள்ளார்.
அங்கு தொடர்ந்து நடைபெற இருக்கும் 20 நாள் படப்பிடிப்புக்குப் பின்னர் அவர் சென்னை திரும்பவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக