திங்கள், 30 ஜனவரி, 2012

பவண் கல்யாணுடன் இணையும் காஜல் அகர்வால்


தெலுங்கு திரையுலகில் பிஸினஸ் மேன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால், பவண் கல்யாணுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் தற்போது வெளியாகிவுள்ள பிஸினஸ் மேன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாகவும், மகேஷ் பாபு கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பூரி ஜகன்னாத் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் பவண் கல்யாணுடன் இணைந்து காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.
பவண் கல்யாண் தற்போது ஹிந்தி மொழிமாற்றமான தபாங் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நடித்து வருகிறார்.
அதனால் தபாங் திரைப்படம் முடிந்த பிறகு பூரி ஜகன்னாத் இயக்கும் திரைப்படத்தில் அவர் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக