வெள்ளி, 20 ஜனவரி, 2012

நான் விவரமான பெண்: ஓவியா


மெரினா திரைப்படத்தில் நடித்த ஓவியா தான் மிகவும் விவரமான பொண்ணாக மாறிவிட்டதாக கூறியுள்ளார்.
களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா தற்பொழுது மெரினா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, களவாணி திரைப்படத்தில் நடித்த பிறகு எனக்கு அந்த வெற்றியை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை.
என்னை வழி நடத்தவும் சரியான ஆட்கள் இல்லை. ஆனால் தற்பொழுது நான் மிகவும் விவரமான பொண்ணாக மாறிவிட்டேன்.
மெரினா திரைப்படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவத்தை தந்துள்ளது.
சுண்டல் விற்கும் சிறுவர்கள், மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் என்று ஒரு பெரிய உலகமே இயங்கும் மெரினா கடற்கரை.
அதில் நானும் சிவகார்த்திகேயனும் உலகம் மறந்த காதலர்களாக நடித்துள்ளோம்.
நடிகை அமலாபாலையும் என்னையும் இணைத்து நிறைய கேள்விகள் எழுகின்றன, அது தேவையற்றது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக