![]() |
பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிப்பதால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் முடங்கி கிடக்கின்றன.![]() அது ஓடப்பட்டதும் இன்னொரு பெரிய படம் அதே திரையரங்கில் திரையிடப்படுகிறது, இதனால் சிறு பட்ஜெட் திரைப்படங்களின் இயக்குனர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இந்த சிரமங்களை சீர் செய்ய தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 5 பண்டிகைகளில் மட்டுமே பெரிய நடிகர்கள் படங்களை வெளியிட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகையில், சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை உள்ளது. இதை மாற்றுவதற்கு பெரிய நடிகர்கள் படங்களை தமிழ் புத்தாண்டு, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய 5 பண்டிகை தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் சிறு பட்ஜெட் திரைபடங்களுக்கு மற்ற நாட்களில் தாராளமாக திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறினார். |
திங்கள், 9 ஜனவரி, 2012
பெரிய பட்ஜெட் படங்களை பண்டிகைகளில் மட்டும் வெளியிட கட்டுப்பாடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக