திங்கள், 9 ஜனவரி, 2012

கொலைவெறி பாடல் அர்த்தமற்றது: பாடலாசிரியர் ஜாவேத்


பிரபல ஹிந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், கொலவெறி பாடலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் எழுதி, பாடிய “ஒய் திஸ் கொல வெறி டி” பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது.
மொழி தெரியாதவர்கள் கூட முணு முணுக்கும் மந்திரமாக இந்தப்பாடல் பிரபலமாகி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய பிரபலங்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்கும் வாய்ப்பு, இந்த பாடல் மூலம் தனுஸிற்கு கிடைத்தது.
ஒரு புறம் பரபரப்பாக பேசப்பட்டாலும், மறுபுறம் சர்ச்சைகளும் இப்பாடலுக்கு எழுந்துள்ளது. இந்தப்பாடல் வெளியான உடனேயே பெண்கள் அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் பிரபல ஹிந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் கொலவெறி பாடலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, எந்த ஒரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும்.
ஆனால் இவை எதுவுமே இல்லாத பாடல் ஒன்று என்றால் அது ஒய் திஸ் கொல வெறி டி பாடலாகத்தான் இருக்க முடியும்.
இது அர்த்தமற்ற ரசனையாகும் நல்ல அர்த்தங்களும், தத்துவங்களும் நிறைந்த பாடல்கள் ஏராளம் உள்னன. அவற்றுக்கு கூட இந்த அளவு வரவேற்பு இல்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக