வெள்ளி, 20 ஜனவரி, 2012

20 உதவி இயக்குனர்களுடன் உருவாகும் கும்கி


கும்கி திரைப்படத்தை 20 உதவி இயக்குனர்களுடன் உருவாக்கி வருகின்றார் இயக்குனர் பிரபு சாலமன்.
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு 4 உதவி இயக்குனர்கள் தான் வேலை செய்து வந்தார்கள்.
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
கும்கி திரைப்படத்தை இயக்கிவரும் பிரபு சாலமன் உதவி இயக்குனர்கள் எண்ணிக்கையில் சத்தமில்லாமல் ஒரு சாதனையே படைத்து வருகிறார்.
இப்படத்தில் வேலை செய்யும் மொத்த உதவி இயக்குனர்களின் எண்ணிக்கை இருபது.
கும்கி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடந்து வருகிறது.
மலைமீது ஏறி இறங்குவது கடினம் என்பதால் தன் உதவிக்காக இருபது உதவி இயக்குனர்களை இப்படத்தில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக