புதன், 25 ஜனவரி, 2012

போர் பிரேம்ஸ் திரையரங்க நிர்வாகி மகனுக்கு இன்று திருமணம்: ரஜினிகாந்த் வாழ்த்து


கொலிவுட்டில் போர் பிரேம்ஸ் திரையரங்க நிர்வாகி கல்யாணத்தின் மகன் சதீஷ் அஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகிலும் பத்திரிகை உலகிலும் போர் பிரேம்ஸ் திரையரங்கின் நிர்வாகி கல்யாணம் மிகவும் பிரபலமானவர்.
ஆரம்ப காலத்திலிருந்தே கொலிவுட் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நெருக்கமானவர்.
இவரது மகன் சதீஷ் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். இவருக்கும் அஞ்சலிக்கும் இன்று(25.1.2012) காலை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது.
திருமண விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். காலை 10 மணிக்குப் பிறகு(இந்திய நேரம்) சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த பிறகே திருமணம் நடந்தது.
திரையுலக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தோடு வந்திருந்து வாழ்த்தினர். சரத்குமார்-ராதிகாவும் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினர். இன்று மாலை அதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக