![]() |
கெளதம் மேனன் தயாரிப்பில் நடிக்கும் ஜெய் படத்தை இயக்குபவர் பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.![]() முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை. பின்னர் தன்னை கௌதம் ஒப்பந்தம் செய்ய அழைத்துள்ளார் என்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு நடித்த பாத்திரத்திற்காக என்றும் தெரிய வந்தது. எங்கேயும் எப்போதும் படம் வெளியானதும் கௌதம் போன் செய்து ஜெய்யை வாழ்த்தினாராம். இருவரும் சேர்ந்து சீக்கிரம் படம் செய்வோம் என்று சொன்னவர், தன் தயாரிப்பில் ஜெய்யை ஒப்பந்தம் செய்திருக்கிறார். விரைவில் கௌதம் மேனன் இயக்கத்திலும் நடிக்க இருப்பதால் விண்ணைத்தாண்டி வருவாயாவில் தவற விட்ட வாய்ப்பை இப்படத்தின் மூலம் அடைந்ததற்காக ஜெய் சந்தோஷத்தில் இருக்கிறார். |
புதன், 25 ஜனவரி, 2012
கௌதம் மேனன் தயாரிப்பில் ஜெய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக