திங்கள், 9 ஜனவரி, 2012

முடிவுக்கு வந்த சிம்பு, ஜீவா மோதல்


கொலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட சிம்பு, ஜீவா மோதல் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
திரையுலகில் வழக்கமாக நடிகைகளுக்கு இடையே தான் மோதல் அதிகமாக இருக்கும். ஆனால் சமீப காலமாக நடிகர்களுக்குள்ளும் இது அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடிகர் சிம்பு- ஜீவா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
கே.வி.ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் சிம்பு. சில காரணங்களுக்காக அப்படத்திலிருந்து விலகினார்.
ஜீவா இப்படத்தின் கதாநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இப்படம் வெற்றியடைந்ததையடுத்து சிம்புவுக்கும், ஜீவாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருவரும் தனித்தனியே ஒருவரை ஒருவர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் ஒருவரை ஒருவர் ட்விட்டர் மூலம் பாராட்டியுள்ளனர்.
சிம்பு தனது ட்விட்டரில் கூறியதாவது, நண்பன் பட டிரெய்லர் பார்த்தேன். அதில் ஜீவாவின் நடிப்பும், தோற்றமும் சிறப்பாக உள்ளது.
அப்படத்தில் நடித்ததற்கு பாராட்டுகளையும், பிறந்த தின வாழ்த்துகளையும் ஜீவாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாராட்டுக்கு நன்றி, விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று பதிலளித்துள்ளார் ஜீவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக