புதன், 25 ஜனவரி, 2012

வெங்கட் பிரபுவுடன் கூட்டணியமைக்கும் சூர்யா


மாற்றான் திரைப்படம் முடிந்ததையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் சூர்யா இணையவுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் மாற்றான்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் நடிகர் சூர்யா மாற்றான் முடிந்த கையோடு வெங்கட் பிரபு படத்திற்கு திகதிகள் தந்துள்ளார்.
இது குறித்து சூர்யா கூறுகையில், இது ஒன்றும் திடீரென்று எடுத்த முடிவல்ல. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே வெங்கட் பிரபுவும் நானும் சேர்ந்து படம் பண்ணுவதைப் பற்றி பேசித்துதான் வருகிறோம்.
சில தினங்கள் முன்புவரை சரியான திரைக்கதை அமையாமல் இருந்தது.
சமீபத்தில் வெங்கட் பிரபு கூறிய கமெடி கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக்கதையை வைத்து தற்போது படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்படத்தை தயாரிக்க இருப்பது ஞானவேல் ராஜாவின் க்ரீன் ஸ்டுடியோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக