வெள்ளி, 13 ஜனவரி, 2012

மணிரத்னம் இயக்கத்தில் சமந்தா


இந்திய திரையுலக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நாயகி சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மணிரத்னம் ராவணன் திரைப்படத்திற்கு பிறகு நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதமை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு நீண்ட நாட்களாக நாயகிகள் தெரிவு நடந்து கொண்டிருக்கிறது. முதலில் ராதாவின் மகள் துளசி நடிப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கமல் ஹாசன் இரண்டாவது மகள் அக்ஷரா நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அக்ஷரா இயக்குனராக பணியாற்ற தீவிரமாக உழைத்துக் கொண்டிருப்பதால் அந்த தகவலும் பொய்யானது.
தற்போது பாணா காத்தாடி திரைப்படத்தில் நடித்த நாயகி சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக 45 நாட்களை சமந்தா ஒதுக்கியுள்ளார்.
ஏற்கனவே நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் நாயகி சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தொடர்ந்து பெரிய இயக்குனர்களிடத்தில் பணியாற்றும் மகிழ்ச்சியில் சமந்தா இருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக