சனி, 7 ஜனவரி, 2012

நாடகத்தை ரசித்த சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


தமிழ் திரையுலக சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தன் மனைவியுடன் மேடை நாடகத்தை ரசித்து பார்த்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள வாணி அரங்கத்தில் நேற்று முன்தினம்(5.1.2012) மாலை நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் குழுவினரின் நாடகம் நடத்தப்பட்டது.
இந்நாடகத்திற்கு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் வந்திருந்து அங்குள்ளோரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட அந்த நாடகத்தில் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை சுப்பர் ஸ்டார் பொறுமையாக அமர்ந்திருந்து நாடகத்தை ரசித்துப் பார்த்தார்.
நாடகத்தில் இடம் பெற்ற நகைச்சுவை வசனங்களுக்கு கைதட்டி சிரித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த் அதிசியமாக வெளியே வந்தது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக