![]() |
தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவான ராவணன் திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும், அந்த படத்தில் நடித்த விக்ரமிற்கு நல்ல பெயர் கிடைத்தது.![]() இப்படத்தை மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த பிரபல மலையாள இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கவுள்ளார். கொள்ளைக்காரனாக நடிக்கவுள்ள விக்ரமுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தபு நடிக்கவுள்ளார். இதுகுறித்து இயக்குனர் பிஜாய் நம்பியார் கூறுகையில், தபு நடிப்பது உண்மை தான், இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு தபு தான் பொறுத்தமானவர் என்பதால் அவரை தெரிவு செய்தேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்தாண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வெளிவரும் என்று கூறினார். |
ஞாயிறு, 8 ஜனவரி, 2012
விக்ரமுடன் இணைகிறார் தபு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக