திங்கள், 9 ஜனவரி, 2012

அதர்வாவுக்கு இயக்குனர் பாலாவின் உத்தரவு


தமிழ் திரையுலகில் இளம் நாயகன் அதர்வா, இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் அவன் இவன் படத்துக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கும் எரி தணல் படத்தில் அதர்வா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.
இது பற்றி வெளியே எதுவும் சொல்லக்கூடாது என்று இயக்குனர் பாலா அதர்வாவிடம் உத்தரவிட்டுள்ளார் என்று கோடம்பாக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
எரி தணல் படத்திற்காக தன்னுடை முடி தோற்றத்தை மாற்றிய அதர்வா, படப்பிடிப்பை தவிர வெளி வட்டார விஷேசங்களில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்.
தவிர்க்க முடியாமல் வெளியே வரும் போது கருப்பு நிற தொப்பி அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் நாயகனாக நடித்திருக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதே தொப்பி அணிந்தே கலந்து கொண்டார்.
படத்தில் வரும் கதாப்பாத்திரம், வேடம் பற்றி வெளியே மூச்சு விடக்கூடாது என்று இயக்குனர் பாலா, நாயகன் அதர்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக