ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கவிஞர்களை போற்றும் உடும்பன் படக்குழுவினர்


தமிழ் திரையுலகில் உடும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டை கவியரங்கமாக நடத்த தயாரிப்பாளர் எஸ்.ஜெகநாதன் யோசித்துள்ளார். 
இந்தியாவின் முன்னணி மோட்டர் சைக்கிள் பந்தய வீரர் திலீப் ரோஜர், சனா, கீத்திகா, பிரகதீஷ், செந்தில், கம்பம் மீனா, சுனில், செல்லக்குறி மற்றும் பலர் உடும்பனில் நடித்துள்ளார்கள்.
இந்தப்படத்தை மாடரன் சினிமா நிறுவனம் சார்பில் எஸ்.ஜெகநாதன் தயாரித்துள்ளார். பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெருங்கவிஞர்கள் எழுதிய பாடல்களை படமாக்கியுள்ளார்கள்.
மேலும் தமிழ்க் கவிஞர்களான புலமை பித்தன், பொன்னடியான், கவிக்கோ.அப்துல் ரகுமான், நா.காமராஜன், முத்துலிங்கம், பூவை.செங்குட்டுவன், மு.மேத்தா உட்பட மூத்த கவிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையடுத்து அறிவுமதி, பிறை சூடன், பழனி பாரதி, நா.முத்துகுமார், பா.விஜய், கபிலன், யுகபாரதி, சினேகன், விவேகா, தேன்மொழி தாஸ், ஏகாதசி, நெல்லை ஜெயந்தா, பிரியன், அண்ணாமலை, ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகிய இளம் வயது கவிஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
பாவேந்தர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்களை இன்றைய கவிஞர்கள் அவர்கள் வயதில் ரசிக்காமல் இருந்திருக்க முடியாது.
கவிஞர்களை இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தோன்றி, அருமையான யோசனை என்று நெஞ்சார மகிழ்ந்தனர் என்றும் உடும்பன் இசை வெளியீட்டு விழா கவியரங்கமாக அமைய உள்ளது எனவும் தயாரிப்பாளர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக