வெள்ளி, 20 ஜனவரி, 2012

பூக்கடை தேவையில்லை: மணிரத்னம்


மணிரத்னம் தான் இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கு பூக்கடை என்று தலைப்பு தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
அப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாகவும், அப்படத்திற்கு பூக்கடை என பெயரிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்த சதீஷ் என்பவர் 5 வருடங்களுக்கு முன்னரே 'பூக்கடை' என்ற பெயரை தான் இயக்க இருக்கும் படத்திற்கு பதிவு செய்து வைத்துள்ளார்.
இதனையடுத்து பூக்கடை என்கிற தலைப்பு தன்னுடையது என மணிரத்னம் மீது புகார் அளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த இயக்குனர் மணிரத்னம் கூறுகையில் என் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்கவே இல்லை. ஆகையால் பூக்கடை என்ற தலைப்பு எனக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக