திங்கள், 30 ஜனவரி, 2012

ஹாலிவுட் பாணியில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராம்


பனித்துளி திரைப்படத்திற்காக நாயகன் கணேஷ் வெங்கட்ராம் ஹாலிவுட் பாணியில் நடித்துள்ளார்.
கொலிவுட்டில் அபியும் நானும் படத்தில் நடித்த கணேஷ் வெங்கட் ராம் பனித்துளி படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
அமெரிக்காவில் என்பது சதவீதமும் மீதி இந்தியாவிலும் படத்தின் கதை நகர்கிறது. நாயகன் கணேஷ் வெங்கட்ராம் படத்தின் கதை பற்றி பேசியுள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் ஒரு காதல் கதையை உருவாக்கியுள்ளார்கள். பனித்துளி படத்தில் சென்னையில் வசிக்கும் பையனாக நடித்துள்ளேன்.
பனித்துளியில் இரு வேடங்களில் நடித்துள்ளேன். ஹாலிவுட் அலங்கார கலைஞர் ரோஸ் ஹில் படத்தின் கதைக்கேற்ப என் தோற்றத்தை மாற்ற கடுமையாக உழைத்துள்ளார்.
காதல் தோல்வியால் இந்தியாவே வேண்டாம் என்று அமெரிக்கா செல்லும் நாயகன் அங்கே சந்திக்கும் திகிலூட்டும் சம்பவங்களே படத்தின் திரைக்கதை.
இதில் என்னுடன் கல்பனா பண்டிட், ஷோபனா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள் என்று பனித்துளி பட நாயகன் கணேஷ் வெங்கட் ராம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக