புதன், 25 ஜனவரி, 2012

ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட மாட்டேன்: ரிச்சா கங்கோபாத்யாய


தெரிவித்துள்ளார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய.
தமிழில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த சிறுத்தை திரைப்படத்தை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ஹிந்தியில் இயக்கி வருகிறார் நடிகர் பிரபுதேவா.
அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு மட்டும் நடனமாட ரிச்சா கங்கோபாத்தியாய ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ரிச்சா கூறுகையில், முக்கியமான திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் சில ஹிந்திப்படங்களை மறுத்தேன்.
இதனால் என் மீது கோபம் கொண்டு ஒரு சிலர் வேண்டுமென்றே இது போன்ற வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்.
ரவுடி ரத்தோர் திரைப்படத்தில் என்னை ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாட இதுவரை எவருமே கேட்டதில்லை.
அப்படியே கேட்டிருந்தாலும் ஒரு பாடலுக்கு மட்டும் நான் நடனமாட மாட்டேன் என்று தீர்மானமாய் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக