வியாழன், 19 ஜனவரி, 2012

வங்காள மொழியில் கலமிரங்கும் ஸ்ரேயா


வங்காள மொழி படமொன்றில் தான் விலை மாதுவாக நடிப்பதாக நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் மழை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா.
அதன் பிறகு ரஜினியுடன் சிவாஜி, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம் என அடுத்தடுத்த படங்கள் அவருக்கு பாராட்டை தேடி தந்தது.
சமீபத்தில் ஜீவாவுடன் ரெளத்திரம் படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கு, தமிழில் வாய்ப்புகள் குறைந்துள்ளதையடுத்து வங்காளத்தில் விலைமாதுவாக நடிக்கவுள்ளார்.
இது குறித்து ஸ்ரேயா கூறியதாவது, நடிகைகள் அனைவருக்கும் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் உண்டு, எனக்கும் அந்த ஆசையுள்ளது.
விலைமாது கதாபாத்திரத்தில் தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும், அதனால் வங்காள மொழி படமொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கவுள்ளேன்.
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, ரவிதேஜா என்று என்னை விட வயதானவர்களுடன் ஜோடியாக நான் நடிக்கிறேன் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ஷம்மி கபூர், அமிதாப்பச்சன் காலத்திலிருந்து இன்று வரை வயதான நடிகர்கள் இளம் நடிகைகளுடன் தான் ஜோடியாக நடிக்கின்றனர் அது தவறல்ல என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக