![]() |
கொலிவுட்டில் கே.எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையான் 3 டி படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.![]() Motion Capturing தொழில் நுட்பத்துடன் ஹாலிவுட் படங்களான அவதார் மற்றும் டின் டின் போன்று கோச்சடையான் உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஆயத்த வேலைகளில் கடந்த சில மாதங்களாக ரவிக்குமாரும், சௌந்தர்யாவும் தீவிர ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கோச்சடையான் படத்தின் பூஜை எந்த ஆடம்பரமும் விளம்பரமும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து லதா ரஜினிகாந்த், பூக்கள், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என்று கோச்சடையான் பூஜை நடந்துள்ளது. என் கணவர் மீண்டும் திரையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். கோச்சடையானுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். பூஜை நடந்தது குறித்து சௌந்தர்யாவும் உறுதி செய்துள்ளார். அதே நேரம் படப்பிடிப்பு தொடங்கும் நாளில் விசேஷமாக ஒரு பூஜை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். |
திங்கள், 30 ஜனவரி, 2012
கோச்சடையான் திரைப்படத்திற்கு பூஜை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக