சனி, 7 ஜனவரி, 2012

கோச்சடையான் படத்தில் நடிக்க சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயார்


இந்திய திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான ரஜினிகாந்த் கோச்சடையான் படத்திற்காக மும்முரமாக களமிறங்க முடிவெடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் பி.வாசு மகன் சக்தியின் திருமணம், துஷ்யந்த் திருமணம், நடிகை மானுவின் நாட்டிய விழா ஆகிய விஷேச விழாக்களில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவலாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
சமீபத்தில், சினிமா நடிகராக இருந்து மேடை நாடகங்களில் நடித்து சாதனை செய்து வரும் ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தை ரசித்த ரஜினிகாந்த் அவரின் நாடக நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேடை நாடக கலைஞரான ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகம் பிரமாதமாக வந்துள்ளது. அவரது சிறப்பான நடிப்பால் என்னை கட்டிபோட்டுள்ளார். நாங்கள் நடிக்க வந்த ஆரம்ப நாட்களை என்றும் மறக்க முடியாது.
உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வெடுத்த ரஜினிகாந்த் கூறியதாவது, இனி முழு மூச்சாக நடிப்பில் இறங்கப் போகிறேன். அடுத்த மாதம் நடக்கும் கோச்சடையான் படப்பிடிப்பில் நான் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பை காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக