திங்கள், 30 ஜனவரி, 2012

கோச்சடையான் படப்பிடிப்பு தொடங்கவில்லை: சௌந்தர்யா


கோச்சடையான் பட வேலைகள் தொடங்கியுள்ளது ஆனால் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று சௌந்தர்யா கூறியுள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தி்ல் உருவாகி வரும் திரைப்படம் கோச்சடையான்.
இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கவுள்ளார்.
இது குறித்து சௌந்தர்யா கூறுகையில், கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளங்கள் சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. என் தந்தையை வைத்து படம் இயக்குவது எனக்கு மிகவும் சந்தோஷமாகவுள்ளது.
இப்படத்திற்கு ஓஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் மேற்பார்வையாளராக கே.எஸ்.ரவிக்குமார் பணியாற்றுகிறார் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக