புதன், 25 ஜனவரி, 2012

மீண்டும் திரைக்கு வரும் நயன்தாரா


தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனாவுடன் ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணன் மற்றும் நடிகை நயன்தாரா நடித்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் ஸ்ரீ ராம ராஜ்யம்.
பிரபு தேவாவுடன் தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் இத்திரைப்படம் தனக்கு கடைசியான திரைப்படம் என்று அறிக்கை விட்டிருந்தார் நயன்தாரா.
இந்நிலையில் நடிகர் நாகார்ஜுனா ஜோடியாக ஒர் புதிய திரைப்படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. தசரத் இயக்கும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையாகும்.
நயன்தாரா, நாகார்ஜுனா ஜோடி ஏற்கெனவே பாஸ் ஐ லவ்யூ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நயன்தாரா திரையுலகில் மீண்டும் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார.
தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால், தமிழ்ப் படங்களிலும் விரைவில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக