திங்கள், 9 ஜனவரி, 2012

கன்னட மொழியில் காஞ்சனா


தமிழில் வெளியாகி வசூலை அள்ளிய காஞ்சனா திரைப்படம் கன்னடத்தில் மறுஒளிப்பதிவு செய்யப்படவுள்ளது.
நடினக் கலைஞரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து, இயக்கிய படம் காஞ்சனா.
முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், திகிலாகவும் ரசிகர்களை கவர்ந்த இந்த படத்தில் லட்சுமிராய், தேவதர்ஷினி, ஸ்ரீமன், கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தந்த இப்படத்தை கல்பனா என்ற பெயரில் கன்னடத்தில் மறுஒளிப்பதிவு செய்து இயக்கவுள்ளார் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரான ராம நாராயணன்.
கன்னட காஞ்சனாவில் உபேந்திரா கதாநாயகனாக நடிக்கவுள்ளார் லட்சுமிராய் நடித்த வேடத்தில் அவரே நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, மராத்தி, குஜராத்தி என இந்திய மொழிகள் அனைத்திலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார் ராமநாராயணன்.
இவர் தனது 120வது படமாக கல்பனாவை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக