![]() |
இந்தியாவின் உயர்ந்த விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.![]() பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, சினிமா இயங்குனர் மீரா நாயர், இசை கலைஞர்கள் டி.வி. கோபாலகிருஷ்ணன், எம்.எஸ். கோபால கிருஷ்ணன், மற்றும் பிரபல இதய சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி உட்பட 27 பேர் பத்ம பூசன் விருதுக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளனர். பத்ம ஸ்ரீ விருதுக்கு ஹொக்கி அணியின் முன்னாள் தலைவர் ஸபர் இக்பால், பெண்கள் கிரிக்கட் அணியின் கப்டன் ஜூலன் கோஸ்வாமி, வில்வித்தை வீரர் லிம்பா ராம், வைத்தியர்கள் வி.எஸ். நடராஜன், வி. மோகன், சமூக ஆர்வலர் பி.கே.கோபால் உட்பட 77 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். |
புதன், 25 ஜனவரி, 2012
பத்ம விருது பெரும் சினிமா கலைஞர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக