![]() |
ஒரு தமிழனாக பிறந்து உலகமே வியக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.![]() சென்னை, மும்பை, டெல்லி, கோல்கட்டா என நான்கு நகரங்களில் தன் இசை நிகழ்ச்சி விரைவில் நடத்தவுள்ளார் என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஏனென்றால் ரஹ்மான் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை இதுவரை நடத்தியதே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மிக மிக பிரமாண்டமாக நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு வருகிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். மேலும் ரஹ்மானின் இசைப்பள்ளியில் சேர்ந்து இசை பயின்று வரும் மாணவர்களும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இசையமைக்கவுள்ளனர் என்பது இந்த இசை நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பம்சமாகும். |
ஞாயிறு, 8 ஜனவரி, 2012
ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக