ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கொலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விக்ரம் ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நடிகை தபுவுடன் இனணயவுள்ளார். தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவான ராவணன் திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும், அந்த படத்தில் நடித்த விக்ரமிற்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஹிந்தி திரைப்படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தை மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த பிரபல மலையாள இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கவுள்ளார். கொள்ளைக்காரனாக நடிக்கவுள்ள விக்ரமுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை தபு நடிக்கவுள்ளார். இதுகுறித்து இயக்குனர் பிஜாய் நம்பியார் கூறுகையில், தபு நடிப்பது உண்மை தான், இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு தபு தான் பொறுத்தமானவர் என்பதால் அவரை தெரிவு செய்தேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்தாண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வெளிவரும் என்று கூறினார்.


நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்த நடிகை நிக்கோல், தனக்கு சம்பள பாக்கியுள்ளதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ராஜ்கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை சோனியா அகர்வால் நடித்த படம் ஒரு நடிகையின் வாக்குமூலம்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நிக்கோலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.
இப்படம் வெளியாகவுள்ள நிலையில் தன்னுடைய சம்பளத்தில் ரூ.50 ஆயிரம் பாக்கி உள்ளதாக நிக்கோல் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பள பாக்கியை படக்குழுவினர் தரவில்லை என்றால் இப்படத்தை வெளியிடக்கூடாது என்று நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரை மறுத்துள்ள இயக்குனர் ராஜ்கிருஷ்ணா, படத்தின் பாதியிலேயே நிக்கோல் நடிக்கமால் விலகிவிட்டார், அவரால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக