திங்கள், 9 ஜனவரி, 2012

மெரினா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா


தமிழ் திரையுலகில் மெரினா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை(9.1.2012) மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு மெரினாவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை இயக்குனர்கள் பாண்டிராஜ், தங்கர் பச்சான் ஆகியோர் பேசினர்.
இப்படத்தின் பாடலை இயக்குனர் அமீர் வெளியிட இயக்குனர் சசிகுமார் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பாடகர் கிரிஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மெரினா திரைப்படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது, மெரினா பலவிதமான சுவாரசியங்களை உள்ளடக்கிய கடற்கரை ஆகும்.
நான் மெரினாவைப் பற்றி படமெடுப்பேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஓவியா ஆகியோர் காதல் ஜோடிகளாக மட்டுமின்றி கலகப்பான ஜோடிகளாகவும் வலம் வருவார்கள்.
இரு சிறுவர்களின் நட்பை ஆழமாக பரிமாறிக் கொள்வார்கள். இன்னும் நீங்கள் பார்த்த, பார்த்திராத விடயங்களை இந்த மெரினாவில் கொடுத்திருக்கிறேன்.
கவிஞர் நா.முத்துக்குமார் சென்னையைப் பற்றி ஒரு அட்டகாசமான பாடல் எழுதியிருக்கிறார். மெரினா கடற்கரையைப் பற்றியும், இரண்டு சிறுவர்களின் நட்பை பற்றியும் பல வித்தியாசமான பாடல்களை இப்படத்தில் கொடுத்திருக்கிறோம்.
படம் சிறப்பாக வந்திருக்கிறது. காமெடி கலந்த கலாட்டா கடற்கரையாக இந்த மெரினாவை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக