![]() |
விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மானை கண்டெடுத்தவர் இயக்குனர் மணிரத்னம்.![]() இவர் தனது 46வது பிறந்த தினத்தை நேற்று(6.1.2012) கொண்டாடினார். இசைக்கான கோல்டன் குளோப் கிராமி விருதுகளை வென்ற ரஹ்மான், இன்று இந்திய சினிமாவின் எல்லையைத் தாண்டி ஹாலிவுட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். ஹாலிவுட்டின் ஜாம்பவான் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் திரைப்படத்துக்கு ரஹ்மான் இசையமைத்து முடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை விட ரஹ்மானுக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு எவராலும் கொடுக்க முடியாது. நான்கு தேசிய விருதுகள், 14 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 13 பிலிம் ஃபேர் சவுத் விருதுகள், நான்கு பாலிவுட் மியூசிக் விருதுகள் உட்பட இன்னும் பல விருதுகளோடு தனது இசை வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக உருவாக்கிய ஜெய் ஹோ பாடல் தொகுப்பின் பின்னணி இசைக்காக கிடைக்கப்பெற்ற இரு ஆஸ்கர் விருதுகளும், கோல்டன் குளோப் விருதுகளும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. |
சனி, 7 ஜனவரி, 2012
46வது பிறந்த நாளை கொண்டாடினார் ஏ.ஆர்.ரஹ்மான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக