செவ்வாய், 17 ஜனவரி, 2012

இஷா ஷெர்வானி-ஜாகிர்கான் திருமணம்


பாலிவுட் நடிகை இஷா ஷெர்வானி கிரிக்கட் வீரர் ஜாகிர் கானை வருகிற மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை இஷா ஷெர்வானி கமலஹாசனுடன் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இஷா ஷெர்வானி கிரிக்கட் வீரர் ஜாகீர்கானை மணக்கிறார்.
இஷா ஷெர்வானியும் ஜாகீர்கானும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். கடந்த 2005-ல் அவுஸ்திரேலியாவில் கிரிக்கட் போட்டி நடந்த போது அங்கு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க இஷா ஷெர்வானி சென்று இருந்தார்.
அப்போது இருவரும் நட்பாகி பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதற்கு முன்பு கைவசம் உள்ள படங்களை முடித்து விட இஷா ஷெர்வானி திட்டமிட்டுள்ளார்.
திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக