திங்கள், 30 ஜனவரி, 2012

திரிஷாவுக்கு பாராட்டுக்கள்


தெலுங்கில் திரிஷா நடித்த பாடிகார்ட் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கொலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று மூன்று மொழிகளிலும் நாயகி திரிஷா பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கொலிவுட்டில் தல அஜீத்துடன் நடித்த மங்காத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி அடைந்துள்ளது.
இதையடுத்து நடிகை திரிஷா தெலுங்கில் நடித்த பாடிகார்ட் வெற்றி அடைந்துள்ளது.
பாடிகார்ட்டில் திரிஷாவின் நடிப்பைப் பார்த்து திரையுலகத்தினர் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
இதனால் நாயகி திரிஷா மகிழ்ச்சியில் இருக்கிறார். தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடனும், தமிழில் விஷாலுடனும் சமரன் திரைப்படத்திலும் திரிஷா நடிக்கிறார்.
இரு படங்களும் இன்னொரு நிலைக்கு தன்னை கொண்டு செல்லும் என்று நாயகி திரிஷா எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக