![]() |
கே.எஸ்.ரவிக்குமாரின் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோச்சடையானில் நடிக்க இருக்கிறார்.![]() இந்நிலையில் கோச்சடையான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு சரத்குமாரை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கனவே ராணா படத்திலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. கோச்சடையான் படத்தின் இயக்குனரான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் இணையத்தில், கோச்சடையான் படத்தில் சரத்குமார் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். கோச்சடையான் படத்தில் இப்போது வரை ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, சிநேகா ஆகியோர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. கேத்ரீனா நாயகியாக நடிக்க திகதிகள் ஒதுக்கிக் கொடுப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. |
புதன், 25 ஜனவரி, 2012
கோச்சடையானில் சரத்குமார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக