![]() |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை நமீதா, தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, கன்னட திரையுலகிற்கு சென்றுள்ளார்.![]() ஆம்பி வேலி, சென்னை உட்பட இடங்களில் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை விரிவுபடுத்தியிருக்கும் நமீதா சமீபகாலமாக தனது நண்பர் பரத் கபூரைப் பிரிந்து வழக்கறிஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது. இதுபற்றி நமீதா கூறுகையில், சினிமாவில் இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை இதுவாகத்தான் இருக்கும். என் அலுவலகத்தில் மூன்று வழக்கறிஞர் இருக்கிறார்கள், மூவருக்கும் வயது 60க்கும் மேல். 60 வயதுக்கு மேற்பட்ட ஒருவருடன் சுற்ற வேண்டிய அவசியம் எனக்கு ஏன் வரப்போகிறது. என் தந்தைக்கு இந்த விஷயம் தெரிந்தால் மூன்று வழக்கறிஞர்களின் வேலையும் பரிபோய்விடும் என்று கேலி செய்துள்ளார். |
சனி, 7 ஜனவரி, 2012
நான் யாரையும் காதலிக்கவில்லை: நமீதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக