புதன், 25 ஜனவரி, 2012

பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் பொன் விழா


மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் பொன் விழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.
1962-ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சவுகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் பீங் சிங் இயக்கத்தில் வெளிவந்த படம் பார்த்தால் பசி தீரும்.
இத்திரைப்படத்தின் 50வது ஆண்டு விழாவை நடிகர் திலகம் பிலிம் சொசைட்டி மற்றும் பாரத் கலாசார் இணைந்து நடத்தியது.
இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் சவுகார் ஜானகி, சச்சு, எம்.என்.ராஜம், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ், வசன கர்த்தா ஆரூர் தாஸ், இசையமைப்பாளர் ராமமூர்த்தி, பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்த்தால் பசி தீரும் படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில் தயாரிப்பாளரும், சிவாஜின் மகனுமான ராம்குமார் பேசுகையில், பா... வரிசை திரைப்படங்கள் என் தந்தைக்கு மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்துள்ளது.
சவுகார் அம்மா பற்றி சொல்ல வேண்டும், 80 வயதிலும் நகையெல்லாம் அணிந்து இளமையாகவும், அழகாகவும் காணப்படுகிறார்கள். இது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
பின்னர் பலம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பேசுகையில் சிவாஜி அவர்கள் நடிக்கும் காலத்தில் நானும் சினிமாவில் இருந்தேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இதற்காக கலைத்தாயை வணங்குகிறேன் என்று கூறினார்.
அதன் பின் ஆருர்தாஸ் பேசுகையில், 1961-ல் பாசமலர் திரைப்படம் வெளியான பிறகு 1962-ல் பார்த்தால் பசி தீரும் திரைப்படம் வெளியானது.
சிவாஜியின் படங்களுக்கு நான் வசனம் எழுதி என்னை பிஸியாக இருக்க வைத்த காலம் அது. அப்படியே என்னை ஏ.வி.எம் நிறுவனத்திற்கு அழைத்து சென்றது அவருடைய படங்கள் தான். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் சிவாஜி என்று கூறினார்.
 
 
 
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக