திங்கள், 30 ஜனவரி, 2012

சிந்து சமவெளி திரைப்படம் மீண்டும் வெளியிட வேண்டும்: அமலா


தான் நடித்த சிந்து சமவெளி திரைப்படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
சாமி இயக்கத்தில் வெளியான படம்தான் சிந்து சமவெளி. இப்படத்தில் மாமனாருடன் தகாத உறவு கொள்ளும் மருமகள் கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்திருந்தார்.
சிந்து சமவெளி திரைப்படம் தனக்கு எதிர்ப்பு கொடுக்கும் என்று அமலா பாலே நினைத்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு பல்வேறு மாதர் சங்கங்கள், பத்திரிக்கைகள், கட்சிகள், சமூக அமைப்புகள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
ஆரம்பத்தில் வெளியே தலைகாட்ட முடியாமல் இருந்த அமலா பால், அதன் பிறகு நடித்த மைனா, தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளதால் இன்று முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சிந்துசமவெளி பற்றி அமலா பால் கூறுகையில், நான் நடித்ததிலேயே நல்ல திரைப்படம் சிந்து சமவெளிதான். அந்தப் படத்தில்தான் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது.
தற்போது அந்தப் படத்தை மறுவெளியீடு செய்தாலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளேன். முடிந்தால் அந்த படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்று சினிமா நண்பர்களிடம் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக