சனி, 7 ஜனவரி, 2012

பொங்களுக்கு வெளியாகவுள்ள கொள்ளைக்காரன்


நடிகர் விதார்த் நடித்துள்ள  கொள்ளைக்காரன் திரைப்படத்தை பொங்கலன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.
வேட்டை, நண்பன் என்று இரண்டு திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் தற்போது கொள்ளைக்காரன் திரைப்படமும் பொங்கலன்று வெளியாகவுள்ளது.
பிரசாத் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கும் கொள்ளைக்காரன் திரைப்‌படத்தை தமிழ்செல்வன் இயக்கிவுள்ளார்.
இவர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் நடிகர் விதார்த், நடிகை சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.எல்.ஜோகன் இசையமைத்துள்ளார்.
சிறுசிறு தவறுகள் செய்து பின்னர் திருந்தி, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞனை பற்றி கூறுவதே கொள்ளைக்காரனின் கதையாகும்.
இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் கும்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவை உணர்வுடன் கலந்த காதலை கொள்ளைக்காரன் படம் கூறுவதாக இயக்குனர் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக