புதன், 25 ஜனவரி, 2012

தமிழிலும் கவனம் செலுத்துவேன்: சித்தார்த்


தமிழிலும் இனி கவனம் செலுத்துவேன் என்று நடிகர் சித்தார்த் தன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.இப்படத்தில் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் சித்தார்த் கூறியதாவது, மேடையில் நான் பேச ஆரம்பித்தவுடன் ஒரு தமிழன் என்பதை மறந்து சிலர் என்னை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
நான் தமிழ்ப்படங்களில் அதிகம் நடிக்காமல் ஹிந்தியிலும், தெலுங்கிலும் கவனம் செலுத்துவதுதான் இதற்கு காரணம் என்பதை புரிந்துகொண்டேன்.
இந்தத்தவறு இனிமேல் நிகழாமல் பார்த்துக்கொள்வது என்று உறுதியான முடிவு எடுத்துக்கொள்கிறேன்.
இனி வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களாவது தமிழில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தைப் பற்றி அவர் கூறுகையில், இத்திரைப்படம் பத்து நிமிட குறும்படமாக இருந்து பெரும்படமாக மாறியுள்ளது.
ஆனால் பத்து நிமிட குறும்படத்தில் இருந்த சுவாரசியத்தை இரண்டு மணி நேர திரைப்படத்திலும் கொண்டு வந்துள்ளார் இயக்குனர் பாலாஜி என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக