திங்கள், 30 ஜனவரி, 2012

சமூக நோக்கத்துடன் செயற்படும் ஸ்ரேயா


திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக நோக்கத்தோடு சில பணிகளை நாயகி ஸ்ரேயா செய்து வருகிறார்.
தென்னிந்திய படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாயகி ஸ்ரேயா, மலையாளத்தில் காசனோவா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், லட்சுமி ராய், ரோமா ஆகியோருடன் நாயகி ஸ்ரேயா இணைந்து நடித்துள்ளார்.
காசனோவா திரைப்படம் ஹாலிவுட் பாணியில் ஆக்ஸன் மற்றும் திகில் படம் என்று திரையுலகில் கூறுகிறார்கள். இதையடுத்து இந்தியில் கலி கலி சொர் ஹை என்ற படத்தில் இல்லத்தரசி பாத்திரத்தில் ஸ்ரேயா வருகிறார்.
மேலும் இந்திய மொழிப்படங்களில் நடிப்பதில் ஸ்ரேயா ஆர்வம் காட்டினாலும் சமூக நோக்கத்தோடு சில காரியங்களை செய்து வருகிறார்.
மும்பையில் ஸ்ரேயாவுக்கு சொந்தமான ஸ்ரீ ஸ்பா(shree spa) என்ற நிறுவனத்தில் பார்வையற்றவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, நான் இப்படி சமூக நோக்கங்களோடு செய்கிற காரியங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய செயலுக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக